74 வயது மூதாட்டி மரணம் - இறுதிச் சடங்கின் போது சுவாசித்ததால் பரபரப்பு - என்ன நடந்தது?
உடல்நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டி ஒருவர் இறுதிச் சடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார்.
மூதாட்டி உயிரிழப்பு
அமெரிக்காவின் லேன் கேஸ்டர் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் கான்ஸ்டன்ஸ் கிளான்ஸ் (74) என்ற மூதாட்டி. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அப்போது அதில் பணியாற்றிய ஒருவர் மூதாட்டி கிளான்ஸ் சுவாசிப்பதை பார்த்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் விசாரணை
உடனடியாக மூதாட்டிக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த 2 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமல்லாமல் இணையத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.