87 வயது மூதாட்டி செய்த செயல்; கடுமையாக தாக்கிய கொடூர தம்பதி - பகீர் வீடியோ!
மூதாட்டி ஒருவர் பிடித்ததை சமைக்கவில்லை என தம்பதிகள் அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
87 வயது மூதாட்டி
மத்திய பிரதேசத்தில் போபால் நகரில் பர்கேதி பகுதியில் வசிக்கிறார் தீபக் சென். இவர் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். தீபக் தனது மனைவி பூஜா சென் மற்றும் தந்தை வழி பாட்டியுடன் ஒன்றாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில், அந்த தம்பதி பாட்டியிடம் தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைக்கும்படி கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது பாட்டி அதனை சரியாக செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
உடனே ஆத்திரமடைந்த அவர்கள் பாட்டியை சரமாரியாக அடித்துள்ளனர். இந்த சம்பவத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
கொடூர தம்பதி
இந்த தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போபால் காவல் ஆணையாளர் பேசுகையில், தீபக் மற்றும் பூஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வீடியோ அடிப்படையில், அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், தீபக் மற்றும் அவருடைய மனைவி இருவரும் உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரை சேர்ந்தவர்கள்.
தொழிலுக்காக மத்திய பிரதேசத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.