24 வயது பெண்ணை பணம் கொடுத்து திருமணம் செய்த 74 வயது தாத்தா - ஆனால்.. தப்பி ஓட்டம்!
74 வயதான முதியவர் ஒருவர், இளம் பெண்ணை பணம் கொடுத்து வாங்கி திருமணம் செய்துள்ளார்.
உனக்கு 24 எனக்கு 74
இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவின் பசிடன் ரீஜென்சியில், 74 வயதான முதியவர் தர்மன், 24 வயதான ஷெலா அரிக்கா என்ற பெண்ணை திருமணம் செய்ய சுமார் ரூ.1.8 கோடி வரதட்சணை கொடுத்துள்ளார்.
ஆனால், திருமண நாளில் திடீரென அந்த தொகை மூன்று பில்லியன் ரூபாயாக (சுமார் ₹1.8 கோடி) உயர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருணத்திற்குப் பிறகு போட்டோகிராபி செய்த நிறுவனத்திற்கு அவர் பணம் கொடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
தப்பி ஓட்டம்?
இதற்கிடையில், திருமணம் முடிந்த கையோடு மனைவியைக் கைவிட்டதாகவும் மண்டபத்தில் இருந்து தப்பி சென்றதாகவும் தகவல் பரவியுள்ளது. இதனை மறுத்த அவர், "நான் என் மனைவியை பிரியவில்லை.. நாங்கள் இன்னும் ஒன்றாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அவர்கள் குடும்பத்தினரும் இதனை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் கட்டணம் செலுத்தப்படாதது தொடர்பாக போட்டோகிராபி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.