மகனுக்காக சிறுநீரக தானம் கொடுத்த 72 வயது தாய் - நெகிழ்ச்சி சம்பவம்!
மகனை 72 வயது தாய் சிறுநீரகத்தை தானம் செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
சிறுநீரக தானம்
மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த 72 வயது தாய்(கங்கா) கமலேஷ் வர்மா என்ற தனது 46 வயது மகனுக்காக, சிறுநீரக தானத்தை செய்துள்ளார்.
இதுகுறித்து அம்மருத்துவமனையின் தலைமை சிறுநீரகவியல் மருத்துவர் ரித்தேஷ் கூறுகையில், “சிறுநீரகம் தானமளிப்பவர் வயது முதிர்ந்தவராக இருந்ததால், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சவாலாகவே இருந்தது. இருப்பினும் நல்லபடியாக முடியாது.
தாய் செயல்
இதைக் காணும் பிறருக்கும், தங்களின் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மகனுக்கு தன் சிறுநீரகத்தை கொடுத்த தாய் கங்கா, “தன் குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றுவது ஒரு தாயின் கடமை. என் சிறுநீரகம், என் மகனின் வாழ்க்கையை காப்பாற்றும் எனும்பட்சத்தில், அதைவிட எனக்கு வேறென்ன சந்தோஷம் இருந்துவிடப்போகிறது?” என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தாய் - மகன் இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தை தானம் செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.