அவசரமாக தரையிறக்கப்பட்ட 900 விமானங்கள் - சர்வரில் சைபர் தாக்குதல்?
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் உள்ள விமான சேவை முடங்கியது.
தொழில்நுட்ப கோளாறு
உலகின் மிக பெரிய விமான போக்குவரத்தை கொண்ட நாடு அமெரிக்கா. இந்த விமான சேவையை FAA எனப்படும் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தனது கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

விமான நிலையம் குறித்து விமானிகளுக்கு, ஊழியர்களுக்கும் தகவல் அனுப்பும் FAA வின் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்நாட்டில் விமான சேவை பெரும் முடக்கத்தை கண்டது. இதனால் பெரும்பாலான விமான சேவை பாதிக்கபட்டது.
விமான சேவை முடக்கம்
200க்கும் மேற்பட்ட டேக் ஆஃப் ஆன விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டன. இந்த எமர்ஜென்சி சூழலை சீர் செய்ய தொழில்நுட்ப குழுவினர் மின்னல் வேகத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த பாதிப்பு குறித்த விவரத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடனிடம் போக்குவரத்து அமைச்சர் கூறியதாவது,
இது சைபர் தாக்குதல் போன்ற திட்டமிட்ட சதி செயல் காரணமாக நிகழ்ந்துள்ளதா என்ற விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தீவிர முயற்சிக்குப் பின் தொழில்நுட்ப கோளாறு சீரமைக்கப்பட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. இந்த பாதிப்பு காரணமாக 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 6,000 விமான சேவைகள் தாமதமாகின.