4 பேரக்குழந்தைகளுக்கு பாட்டி - 70 வயதில் மாடலிங்கில் அசத்தல்!

United States of America
By Sumathi Jan 08, 2023 04:50 AM GMT
Report

மாடல் அழகி இருவர் தனது 70 வயதிலும் சாதித்து காட்டியுள்ளார்.

மாடல்

அமெரிக்க மாடல், நடிகை, பாடகி மற்றும் தொழிலதிபர் என பல்வேறு முகம் கொண்டவர் பெவர்லி ஜான்சன். 1974 ஆம் ஆண்டில், அமெரிக்கன் வோக்கின் அட்டைப்படத்தில் தோன்றிய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மாடல். மேலும், 1974 ஆம் ஆண்டு பிரெஞ்சு எல்லே இதழின் அட்டைப் பக்கத்தில் தோன்றிய முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமைக்குரியவர்.

4 பேரக்குழந்தைகளுக்கு பாட்டி - 70 வயதில் மாடலிங்கில் அசத்தல்! | 70 Years Old Modeling Industry Beverly Jhonson

தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் பில்லி போர்ட்டரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகளுக்குப் பின் அவருடன் விவாகரத்துப் பெற்றார். அதன்பின், 25 வயதில் தயாரிப்பாளர் டேனி சிம்ஸை 2வது திருமணம் செய்துக் கொண்டார்.

தோல் பராமரிப்பு

பெவர்லிக்கு 1 குழந்தையும், சிம்ஸ்க்கு 4 குழந்தைகளும் உள்ளது. 2வருடங்களுக்கு பின் இருவரும் பிரிந்து விட்டனர். நடிகர் கிறிஸ் நோர்த் உடன் 5 ஆண்டுகள் காதலில் இருந்தார். அவரையும் பிரிந்தார். அதன்பின் மாடலிங் உலகில் நிழைந்து பெரிய இடத்தைப் பெற்றார்.

தற்போது, 70 வயதில் உடற்தகுதியை பராமரித்து கவர்ச்சியாக உள்ளார். தியானம், மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்கிறார். காலை உணவாக எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். மதிய உணவு மற்றும் இரவு உணவில் இறைச்சி மற்றும் வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுகிறார்.

அறுவை சிகிச்சைகள் மூலம் அவர் தனது தோலைப் பராமரித்து வருகிறார்.