70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நடக்கும் அதிசயம்; இனி 2095ல் தான் - மிஸ் பண்ணிடாதீங்க!

World
By Jiyath Apr 03, 2024 05:35 AM GMT
Report

'12 பி பான்ஸ்-புரூக்ஸ்' என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது. 

வால்நட்சத்திரம் 

கற்பனைக்கும் எட்டாத பேரதிசயங்கள் வானில் நிகழ்ந்து வருகின்றன. அதில், வால் நட்சத்திரங்களை காண்பது அரிதான நிகழ்வாகவும், வானியல் அற்புதங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன.

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நடக்கும் அதிசயம்; இனி 2095ல் தான் - மிஸ் பண்ணிடாதீங்க! | 70 Years Comet 12B Pance Brooks Orbits Sun Earth

அந்த வகையில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும் '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது. தற்போது தெரியாத தொடங்கியுள்ள இந்த வால் நட்சத்திரம் சுமார் 30 கி.மீ. நீள மையப் பகுதியை கொண்டது.

குளிக்க, பல்துலக்க சிறுநீர்.. சாணம் தான் சன்ஸ்க்ரீம் - முண்டாரி மக்கள் பற்றி தெரியுமா?

குளிக்க, பல்துலக்க சிறுநீர்.. சாணம் தான் சன்ஸ்க்ரீம் - முண்டாரி மக்கள் பற்றி தெரியுமா?

பூமிக்கு மிக அருகில் 

இதனை தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நடக்கும் அதிசயம்; இனி 2095ல் தான் - மிஸ் பண்ணிடாதீங்க! | 70 Years Comet 12B Pance Brooks Orbits Sun Earth

இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095-ல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வால் நட்சத்திரமானது கடந்த 1385-ம் ஆண்டு சீனாவிலும், 1457-ம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டதாக குறிப்புகள் உள்ளன.