இரவில் கிராம மக்கள் தடியடி; 70 பேர் மண்டை உடைந்து படுகாயம் - திடுக் வீடியோ?
தடியடி நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தடியடி நிகழ்ச்சி
ஆந்திரா, தேவரகட்டுவில் தசரா விழாவை முன்னிட்டு, மலமல்லீஸ்வர சுவாமி கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் தடியால் தாக்கிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 10 கிராமங்களில் இருந்து மக்கள் கலந்துள்ளனர். இதற்கிடையில், தீவட்டிகளுடன் தடியால் அடித்துக் கொள்ளும் நிகழ்வின் போது, நெரிசல் ஏற்பட்டுள்ளது.
70 பேர் படுகாயம்
மேலும், தடியடி மற்றும் நெரிசலில் சிக்கியதில், சுமார் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்,
70 Injured During Devaragattu Banni Festival in Kurnool District
— Sudhakar Udumula (@sudhakarudumula) October 13, 2024
The annual Banni Utsav, a traditional Dussehra event marked by intense stick fights, once again turned violent at Devaragattu in Kurnool district. Despite efforts by local authorities to prevent clashes, the… pic.twitter.com/JYliF2r0ZL
இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த திருவிழாவை கொண்டாடுகின்றனர். அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொள்வது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக, அம்மாநிலத்தின் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தபோதிலும், ஐதீகம் என்ற பெயரில் இது தொடர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.