3 ஏடிஎம்களை உடைத்து ரூ.70 லட்சம் கொள்ளை..கேரளாவை அதிர வைத்த கொள்ளை கும்பல்!

Kerala India Crime
By Vidhya Senthil Sep 27, 2024 10:35 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 கொள்ளை சம்பவம் அதிகாலை 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்துள்ளது.

கேரளா

திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் சுமார் ரூ.70 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

atm

கேரள மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் மாப்ராணம், திருச்சூர் கிழக்கு மற்றும் கோலாசி ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை ஏடிஎம் மையத்தில் அடையாளம் தெரியாத கும்பல் சுமார் ரூ.70 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

விரட்டி பிடிக்கப்பட்ட லாரி ; என்கவுண்டர் செய்த போலீஸ் - கண்டெய்னர் உள்ளே இருந்த அதிர்ச்சி

விரட்டி பிடிக்கப்பட்ட லாரி ; என்கவுண்டர் செய்த போலீஸ் - கண்டெய்னர் உள்ளே இருந்த அதிர்ச்சி

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஏடிஎம் மைய கட்டுப்பாட்டு அறை மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஏடிஎம் மையத்தைப் பார்வையிட்டனர்.

கொள்ளை

இந்த நிலையில் இது தொடர்பாக திருச்சூர் நகர காவல் ஆணையர் ஆர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொள்ளை சம்பவம் அதிகாலை 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்துள்ளது.

kerala

மேலும் கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, கேஸ் கட்டரைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டியுள்ளனர்" என்று கூறினார். தொடர்ந்து இந்த கும்பல் தொடர்பாக சில தகவல்களைச் சேகரித்துள்ள காவல்துறை, அண்டை மாநிலமான தமிழகத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.