நெருங்கும் தேர்தல் - 4 கண்டெய்னர் சிக்கிய ரூ.2000 கோடி!! ஆந்திராவில் பரபரப்பு
வரும் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆந்திர அரசியல்
வரும் மே 13-ஆம் தேதி ஒரே கட்டமாக ஆந்திர மாநிலத்தின் 175 சட்டமன்ற தொகுதிக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
அம்மாநிலத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்தியில் தான் பெரும் போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேச கட்சியின் கூட்டணியில் மத்திய பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி உள்ளது.
மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாகியுள்ளன. தேர்தல் பணப்படுவாடாவை தவிர்க்க தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
4 கண்டெய்னர்
இந்த சூழலில் தான் அண்மையில், 4 கண்டெய்னர் லாரிகள் சிக்கியுள்ளன.ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் கஜ்ராம்பள்ளியில் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கேரள மாநிலத்தின் கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு கொண்டு சென்ற ரூ.2000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணம் RBI'யின் உத்தரவின் பேரில் கொண்டுசெல்லப்பட்டதால், வாகன தணிக்கைக்கு பிறகு கண்டெய்னர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.