7 வயது சிறுவனுக்கு அத்தையாயால் நிகழ்ந்த கொடூரம் - அதிர்ச்சி பின்னணி!
உறவினர் பெண்ணால் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறாமை
அசாம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(30). இவரது மனைவி கைரொன்னிஷா(28). இவர்களது மகன் இஸ்லாம்(7). ஜாகீர் வேலை தேடி குடும்பத்துடன் கோவை வந்துள்ளார். தொடர்ந்து, சூலூர் அருகே முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் மனைவியுடன் சேர்ந்து வேலை பார்த்துள்ளார்.
அதன் வளாகத்தில் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அதில் சம்பவத்தன்று வேலை முடிந்து திரும்புகையில் அவர்களது மகன் சடலமாக கிடந்துள்ளார். மேலும், முகம் மற்றும் கழுத்தில் காயம் இருந்துள்ளது.
சிறுவன் கொடூர கொலை
தொடர்ந்து, உடலை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பெற்றோர் வேலை செய்யும் மில்லில் நூர்ஜா என்னும் பெண் தான் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
அவர் ஜாகீருக்கு அக்கா முறை எனக்கூறப்படுகிறது.
சில வாரங்களாக, தம்பி மனைவியுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.