உலக அழகி பட்டம் வாங்கியபோது கணவர் 7 வயது சிறுவன் தான் - பிரியங்கா ஷாக் தகவல்
தான் உலக அழகிப் பட்டம் வென்ற போது தனது கணவருக்கு 7 வயது என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. 2000ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றவர். 2018ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அண்மையில், பாலிவுட் நடிகையும் தனது தங்கையுமான பரினீதி சோப்ராவின் திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ளார்.
ஷாக் தகவல்
அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய அவர், "என் மாமியார் என்னிடம் ஒரு சம்பவத்தை கூறினார். கடந்த 2000ஆம் ஆண்டு லண்டனில் நான் உலக அழகிப் பட்டம் வென்றேன். அப்போது எனக்கு 18 வயது ஆகியிருந்தது. அந்த நிகழ்வு பற்றி என்னிடம் பேசிய என் மாமியார்,
நீ வென்றபோது உன்னை நான் தொலைகாட்சியில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உலக அழகி போட்டியின் நேரடி ஒளிபரப்பை அப்போது என்னுடன் அமர்ந்து நிக் ஜோனாசும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது, அவனுக்கு 7 வயது இருக்கும் என்று என்னிடம் கூறினார். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.