பார்த்த முதல் நாளே , 14 வயது சிறுமியிடம் காதலில் விழுந்த சிறுவன் , பாய்ந்த போக்சோ வழக்கு
தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுவன், கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் செய்கிறார்.
பார்த்த முதல் நாளே
நேற்று முன்தினம் இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அப்போது கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ் கிடைக்காததால், திண்டுக்கல் சென்றுள்ளார்.
பின்னர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில், தூத்துக்குடி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, தூத்துக்குடி சிறுவனிடம் வந்தாள்.
பழனிக்கு புறப்பட்ட காதல்ஜோடி
ஏற்கனவே ஒருமுறை அறிமுகம் ஆனதால் 2 பேரும் பேசிக் கொண்டனர். அப்போது 2 பேருக்கும் இடையே காதல் அரும்பியது. இதையடுத்து சிறுவன், அந்த சிறுமியை பஸ்சில் பழனிக்கு அழைத்து சென்றார்.
பின்னர் பழனியில் இருந்து மீண்டும் திண்டுக்கல்லுக்கு சிறுமியை அழைத்து வந்தார். அதன்பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் 2 பேரும், திண்டுக்கல் பஸ் நிலையத்திலேயே இருந்துள்ளனர்.
போக்சோவில் கைது
இதற்கிடையே சிறுமியை காணாமல் அவளுடைய பெற்றோர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
மேலும் சிறுமி கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட போலீசாரை உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிறுவனும், சிறுமியும் தூத்துக்குடிக்கு செல்வதற்காக மதுரைக்கு பஸ்சில் சென்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கிய 2 பேரும், தூத்துக்குடி பஸ்கள் நிறுத்தப்படும் இடத்துக்கு சென்றனர். அப்போது சிறுமியின் உறவினர்கள் 2 பேரையும் பார்த்து விசாரித்தனர்.
அதோடு அவர்கள் அளித்த தகவலின் பேரில் மதுரை போலீசார், 2 பேரையும் மீட்டு, திண்டுக்கல் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுமியை கடத்தி சென்றதாக சிறுவன் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.