பார்ட்டியில் கட்டிபிடித்து ஆடியபோது திடீரென குழிக்குள் விழுந்த பெண்கள் - வீடியோ வைரல்!

Viral Video Brazil
By Sumathi Oct 04, 2022 11:35 AM GMT
Report

பார்ட்டியில் மகிழ்ச்சியாக நடனமாடிய பெண்கள் திடீரென பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் பார்ட்டி

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் கேப்ரிலா கார்வல்ஹோ(38). இவர் அலோகோயின்ஹாஸ் நகரில் தனது சக நண்பரின் பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அதில், பாட்டு நடனம் என ஜாலியாக இருந்துள்ளனர்.

பார்ட்டியில் கட்டிபிடித்து ஆடியபோது திடீரென குழிக்குள் விழுந்த பெண்கள் - வீடியோ வைரல்! | 7 Women Fell Into A Sinkhole Viral Video

நண்பர்கள் 7 பேரும் சுற்றி நின்று கொண்டு வட்டமாக கட்டிப்பிடித்துக் கொண்டு நடனம் ஆடியுள்ளனர். அப்போது தான் அவர்கள் கீழ் இருந்த தரையில் தீடீர் பள்ளம் உருவாகி அதில் ஏழு பேரும் தவறி பள்ளத்திற்குள் விழுந்துள்ளனர்.

 வீடியோ வைரல்

இந்த சம்பவத்தை அருகே இருந்த நபர் வீடியோ எடுத்த நிலையில், அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கீழே விழுந்த ஏழு பெண்களையும் சுற்றி இருந்த நண்பர்கள் உடனடியாக கை பிடித்து தூக்கி ஒரு வழியாக மீட்டுள்ளனர்.

விசாரணையில், அங்கிருந்த வடிகால் அமைப்புக்காக தோண்டப்பட்ட குழி எனவும், அதன் மேல் போடப்பட்ட தளம் பலவீனமாக இருந்ததால் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து குழியை உடனடியாக ஊழியர்கள் சீரமைத்தனர்.