7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் - முந்தும் இந்தியா கூட்டணி
இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன் சேர்த்து 7 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.
இடைத்தேர்தல்
தமிழகத்தில் இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன் சேர்த்து 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
[RJHTGP ]
மேற்கு வங்கம் - 4, இமாச்சல பிரதேசம் - 3, உத்தரகாண்ட் -2, தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், மத்தியபிரதேசம் -1 என மொத்தமாக 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இவற்றில் மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஒரு இடத்தில் ஆம் ஆத்மீ வேட்பாளரும், 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களும், தமிழ்நாட்டில் திமுக வேட்பாளர்களுமே முந்துகிறார்கள். பஞ்சாப் இடைத்தேர்தல் ஆம் ஆத்மீ கட்சி வேட்பாளர் பாஜகவை முந்தியிருக்கும் நிலையில்,
பீகார் மாநிலத்தில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், நிதிஷ் குமாரின் JD(U) வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.
மொத்தமாக வெளியாகி வரும் 13 இடைத்தேர்தலில் 12 இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.