டாப் பணக்கார குடும்பங்கள்; பாதி இந்தியா இவங்ககிட்டதான், இல்லாத விஷயமே இல்ல - யாரெல்லாம் தெரியுமா?
இந்தியப் பொருளாதாரத்தில் செல்வச் செழிப்பில் இருக்கும் டாப் 7 குடும்பங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
அம்பானி குடும்பம்
அம்பானி குடும்பத்தார் நடத்தும் விருந்துகள், வாழ்க்கை முறை மூலம் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறது. முகேஷ் அம்பானி ஆசியாவின் டாப் 1 பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 87.2 பில்லியன்கள் என்று மே மாதம் 2023இல் கணக்கிடப்பட்டுள்ளது.
கோத்ரேஜ் குடும்பம்
கோத்ரேஜ் குடும்பம்தான் நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரக் குடும்பம். இதன் பாரம்பரியம் 124 ஆண்டுகளாகும். நிகர மதிப்பு 13.9 பில்லியன் டாலர்களை கடந்த 2022 ஆம் ஆண்டில் தொட்டது.
பிர்லா குடும்பம்
குமார மங்கலம் பிர்லா தலைமையில் இப்போது உலோகங்கள், சிமெண்ட், பைனான்ஸ், டெலிகாம், ரீடைல் துறைகளில் செயல்பட்டு வருகிறது. இக்குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர்களாகும்.
அதானி குடும்பம்
அதானியின் மகன்களான ஜீத், கரன் அதானி ஆகியோர் தங்கள் குழுமத்தின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கின்றனர். நிகர சொத்து மதிப்பு போர்ப்ஸ் தகவல்படி 2022இல் 150 பில்லியன் டாலர்கள் ஆகும்.
பஜாஜ் குடும்பம்
பஜாஜ் ஆட்டோ உலகளவில் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன மார்க்கெட்டில் டாப்பில் உள்ளது. பஜாஜ் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 14.8 பில்லியன் டாலர்களாகும்.
டாடா குடும்பம்
தொழில்வளத்தைப் பெருக்கியதில் டாடா குடும்பத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. பல்வேறு துறைகளில் இவர்களின் கை ஓங்கியுள்ளது. ரத்தன் டாட்டாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.3800 கோடியாகும்.
மிஸ்திரி குடும்பம்
ஷாப்பூர் மிஸ்திரி கன்ஸ்ட்ரக்ஷன், ரியல் எஸ்டேட், ஜவுளி, ஷிப்பிங் போன்ற துறைகளில் தொழில் நடத்தி வருகிறார். அவரது இளைய மகன் சைரஸ் மிஸ்திரி டாடா குழுவின் தலைவராக 2012-16 வரை பொறுப்பு வகித்தார். சொத்து மதிப்பு 32 பில்லியன் டாலர்களாகும்.