கல்யாண வீடு.. பட்டாசு வெடிப்பதில் வந்த வினை - 7 பேர் மீது காரை ஏற்றிய கொடூரம்!
பட்டாசு வெடிக்க ஏற்பட்ட சண்டையில் 7 பேர் மீது காரை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாண வீடு
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் மணமகள் வீடு உள்ளது. அங்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டதால் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அங்கு வருகை தந்துள்ளனர். மாப்பிளை வீட்டாரோடு தனது காரில் அவர்களின் உறவினர் ஒருவரும் வந்துள்ளார்.

இந்த நிலையில், திருமண மண்டபத்திற்கு வரவேற்பின் ஒரு பகுதியாக பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்திற்கு வெளியே பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் தனது காரை மாப்பிளை வீட்டாரோடு வந்தவர் பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார்.
பட்டாசு
இதனால் அவருக்கும் பெண் வீட்டு ஆட்கள் 7 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த நபர் கோபத்தில் தனது காரை இயங்கி முன்னாள் நின்ற அந்த 7 பேர் மீதும் ஏற்றியுள்ளார். இதனால் அந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்தனர். அந்த 7 பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், போலிசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan