அதிக ரத்தப்போக்கு; கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 7மாத கர்ப்பிணி பலி - மருத்துவர் கைது!
கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.
கருக்கலைப்பு
அரியலூர், புதுக்குடி கரைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி ரமணா. இந்த தம்பதிக்கு தாரணி என்ற மகளும், ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், 7 மாத கர்ப்பமாக இருந்த ரமணா ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் 3வது குழந்தை தேவை இல்லை என எண்ணியுள்ளார். இதனால் மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணி பலி
தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டதால் உடனே ஆபரேஷன் மூலம் சிசுவை அகற்றியுள்ளனர்.
தொடர்ந்து, மேலும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தா.பழூர் ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் தேன்மொழி, செவிலியர் சக்திதேவி, அவரது உதவியாளர் வெற்றிச்செல்வி என மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.