சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு - பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15
நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மேலும்,சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ,சுதந்திர தின விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் பயணிகளுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
7 அடுக்கு பாதுகாப்பு
உள்நாட்டு விமான பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாகவும் வர வேண்டும். இன்று அதிகாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் ஆக.20 நள்ளிரவு வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும். பயணிகள் திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.