வெடித்து சிதறிய விமானம்; 7 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ
சரக்கு விமானம் வெடித்து சிதறியதில், 7 பேர் உயிரிழந்தனர்.
சிதறிய விமானம்
அமெரிக்காவின் லூயிஸ்வில் விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது.

பின் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது. இதனால் பெரும் புகை மண்டலமே உருவானது. சம்பவ இடத்திற்கு விரைந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
7 பேர் பலி
ஆயிரம் கிலோ எடை கொண்ட எரிபொருளுடன் விமானம் வெடித்துச் சிதறியதே பெரிய அளவுக்கான தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
Security footage captures a closer view of the UPS cargo plane crash shortly after takeoff from Louisville’s Muhammad Ali International Airport. pic.twitter.com/s4lGAAl1nZ
— GMI (@Global_Mil_Info) November 5, 2025
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர் என கவர்னர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய இந்த விமானம், 34 ஆண்டுகள் பழமை. 2006 முதல் சேவையில் இருந்துள்ளது. இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.