காரின் மீது சிறுநீர் கழித்த நபர் - தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்!

Canada Death
By Sumathi Nov 03, 2025 03:43 PM GMT
Report

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அநாகரீக செயல்

கனடா, எட்மண் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்வி சிங் சாகூ(55) என்பவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

காரின் மீது சிறுநீர் கழித்த நபர் - தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்! | Indian Man Murder In Canada Shock Reason

இந்நிலையில், அர்வி சிங் சாகூவும் அவரது மனைவியும் எட்மண்டனில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு தங்கள் காருக்குத் திரும்பினர். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரின் மீது சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியான இவர், அந்த நபரிடம் “என்ன செய்கிறீர்கள்?” என அதட்டும் தொணியில் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், “இங்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்... அதைக் கேட்க நீ யார்?” என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

போதையில் போலீசாருடன் ரகளை - வீடியோ வெளியிட்டு சிக்கிய தொகுப்பாளினி

போதையில் போலீசாருடன் ரகளை - வீடியோ வெளியிட்டு சிக்கிய தொகுப்பாளினி

கொன்ற கொடூரம்

ஒரு கட்டத்தில், ஆத்திரம் தலைக்கேறிய சிறுநீர் கழித்த நபர், அருகிலிருந்த கட்டையை எடுத்து அர்வி சிங் சாகூவின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அர்விசிங் சம்பவ இடத்திலேயே சுண்டு விழுந்தார். அவருடன் வந்த நபர் உடனே போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

காரின் மீது சிறுநீர் கழித்த நபர் - தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்! | Indian Man Murder In Canada Shock Reason

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கைதானவர் 40 வயதான கைல் பாபின் என்பது தெரியவந்துள்ளது.