கண்ணாடி பாட்டில்களில் 7 சிசுக்களின் சடலங்கள் - பெரும் அவமானம்!
கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிசுக்களின் உடல்
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் துணிகளை துவைக்க வந்துள்ளனர்.

அப்போது அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது.
பெருத்த அவமானம்
இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார்.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - இன்று முதல் பதிவு!
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    