ஷூ போடல.. மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய பள்ளி நிர்வாகி - பார்வை பறிபோகும் அபாயம்!
மாணவன் மீது பள்ளி நிர்வாகி தாக்கியதில் கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
சரமாரி தாக்குதல்
மதுரை, கே.புதூரைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவரது மகன் பஹியா அதே பகுதியில் ஜன்னா பப்ளிக் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மழையின் காரணமாக ஷூ அணிந்து செல்வதற்கு பதிலாக பள்ளிக்கு செப்பல் அணிந்து சென்றிருக்கிறார். அப்போது, பள்ளியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளர் ஷகீத் என்பவர் ஷூ அணியாததால் மாணவனை கன்னத்தில் ஓங்கி பலமாக அடித்திருக்கிறார்.
பள்ளி நிர்வாகம் அலட்சியம்
இதில் பார்வையே பறிபோகும் அளவிற்கு கண்னில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின் பள்ளியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளராக இருப்பவர் எப்படி அடிக்கலாம்? என நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபாலனால் சிக்கலில் சிக்கிய ‘PSBB பள்ளி’? - அதிர்ச்சி தகவல்
அதற்கு அதற்கு நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்க, எங்களை ஒன்றும் செய்ய முடியாது, முடிந்ததை பாருங்க என ஷகீத் தெரிவித்துள்ளார்.
பள்ளி தாளாளரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனையடுத்து, தனியார் பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் புகார் அளித்ததில், பள்ளியில் விசாரணை நடத்தவிருக்கிறோம். நானே நேரடியாக விசாரணை நடத்தவுள்ளேன். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.