விரைவில் 6ஜி சேவை; தொடங்குவது எப்போது? தொலைத்தொடர்பு துறை செயலாளர் தகவல்!

Chennai
By Swetha Apr 05, 2024 05:11 AM GMT
Report

இந்தியாவில் விரைவில் 6 ஜி சேவையை தொடங்க உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் அறிவித்துள்ளார்.

6ஜி சேவை

தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான இரண்டு நாட்கள் கருத்தரங்கு, சென்னை ஐ.ஐ.டியில் தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய தொலைத் தொடர்பு துறை செயலாளர் தீரஜ் மிட்டல் காணொலி காட்சி மூலமாக கருத்தரங்கை தொடங்கினார்.

விரைவில் 6ஜி சேவை; தொடங்குவது எப்போது? தொலைத்தொடர்பு துறை செயலாளர் தகவல்! | 6G Services Will Be Launched In India Soon

அப்போது பேசிய அவர் இந்தியாவில் 6 ஜி சேவைகள் அறிமுகமாவது குறித்த தகவல்களைத் தெரிவித்தார். "நம் நாடு தொழில்நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. எதிர்கால நடைமுறை வாழ்க்கைகளிலும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு தொலைத்தொடர்பு துறை ஊக்கம் அளித்து வருகிறது.

சென்னையில் 2022 முதல் 5ஜி சேவை அறிமுகம் - மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னையில் 2022 முதல் 5ஜி சேவை அறிமுகம் - மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு

தொலைத்தொடர்பு துறை

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ) வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் இந்தியாவும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

விரைவில் 6ஜி சேவை; தொடங்குவது எப்போது? தொலைத்தொடர்பு துறை செயலாளர் தகவல்! | 6G Services Will Be Launched In India Soon

உலக அளவில் செல்போன்களின் பயன்பாடும் வெகுவாக அதிகரித்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா அதிக வளர்ச்சி கண்டுள்ளது. 2014-ம் ஆண்டில் 1.8 எம்.பி.யாக இருந்த சராசரி இணைய வேகம், தற்போது 50 எம்.பி.யாக அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் குறைந்த செலவில் இணைய சேவை கிடைக்கிறது.

நம் நாட்டில் 5 ஜியைத் தொடர்ந்து விரைவில், 6ஜி சேவைக்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார். 6 ஜி செயல்பாட்டுக்கு வரும்போது, அது மக்களின் உணர்வுகளையும், கணினிகளையும் ஒருங்கிணைக்கக் கூடியதாக இருக்கும்" இவ்வாறு இந்த கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.