சென்னையில் 2022 முதல் 5ஜி சேவை அறிமுகம் - மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு
அடுத்தாண்டு முதல், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் 4ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. உலகில் பல நாடுகளில், கடந்த 2019ம் ஆண்டு முதல் 5ஜி சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் எப்போது துவங்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
பல நிறுவனங்கள், 5ஜி வசதியுடன் மொபைல் ஃபோன்களை உற்பத்தி செய்து விநியோகிக்க துவங்கின.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல பகுதிகளில் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சோதனையை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சென்னை, குருகிராம், பெங்களூரு, மும்பை, டெல்லி, கோல்கட்டா, சண்டிகர், ஜாம்நகர், ஆமதாபாத், ஐதராபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களில் அடுத்தாண்டு முதல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதனை, ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் வழங்க உள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.