5ம் வகுப்பு சிறுமிக்கு ரூ.10 கொடுத்து மிரட்டி சீரழித்த 68 வயது முதியவர் - அதிர்ச்சி சம்பவம்!
முதியவர் ஒருவர் சிறுமிக்கு காசு கொடுத்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தின் கோரிபாரி பகுதியை சேர்ந்ந்தவர் 68 வயது முதியவர். இவர் 5ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருருக்கு ஒரு மாத காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி வராது பெற்றோரிடம் சென்று தனக்கு நிகழ்ந்ததை தன் தாயிடம் கூறியுள்ளார்.
அதனால் அவர் போலீசில் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட முதியவர்மீது கடந்த திங்களன்று போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், போலீசார் விசாரணை நடத்தியதில், "எஃப்.ஐ.ஆர் படி, சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் சம்பவங்கள் நடந்தன. குற்றம்சாட்டப்பட்ட உள்ளூர்வாசியான முதியவர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு ஒவ்வொரு முறையும் சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை செய்ததைப் பற்றி, வெளியில் யாரிடமாவது கூறினால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவேன் எனச் சிறுமியை அவர் மிரட்டியுள்ளார்" என்பது தெரியவந்தது. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.