மொத்தம் 65,000... டெஸ்லா ஆலையில் காணாமல் போன பொருள் - என்ன நடந்தது..?
ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
காபி கோப்பைகள்
உலக பணக்காரர்களில் ஒருவரான 'எலான் மஸ்க்' டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக உள்ளார். டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்,
ஊழியர்கள் கவலை
ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், உலகளவில் டெஸ்லா நிறுவனத்தின் 10% பணியாளர்களை குறைக்கும் திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு ஜெர்மன் டெஸ்லா ஊழியர்களை கவலையடையச் செய்தது. மேலும், இவர்கள் குறைவான ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.