23 வயது இளம்பெண்ணுடன் 65 வயது நபர்.. 6 மகள்களின் சம்மதத்துடன் திருமணம்

Uttar Pradesh Marriage
By Sumathi 1 மாதம் முன்
Report

65 வயது நபர் ஒருவர் 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

தந்தை திருமணம்

உத்தரப் பிரதேசம், ஹூசைனாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நக்கத் யாதவ்(65). இவருக்கு திருமணமாகி 6 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னால் உயிரிழந்தார். 6 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில், நக்கத் யாதவ் தனிமையை தாங்க முடியாமல் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

23 வயது இளம்பெண்ணுடன் 65 வயது நபர்.. 6 மகள்களின் சம்மதத்துடன் திருமணம் | 65 Year Old Man Marries 23 Year Old Uttar Pradesh

இந்த முடிவிற்கு அவரது 6 மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அயோத்தி மாவட்டத்தில் உள்ள கமகாயா தேவி கோயிலில் 23 வயது இளம் பெண் நந்தினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில், டிஜே மியூசிக் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு உறவினர்கள் நடனமாடினர்.

6மகள்கள் சம்மதம்

இந்த திருமண நிகழ்வின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய நக்கத் யாதவ், எனது 6 மகள்களும் தங்கள் கணவர்கள் குழந்தைகளும் சந்தோஷமாக அவர்கள் வீட்டில் வாழ்கின்றனர்.அவர்கள் சம்மதத்தை பெற்று தான் இந்த திருணத்தை செய்து கொள்கிறேன்.

மனைவியின் மறைவு என்னை தனிமையில் தள்ளியதால் அதில் இருந்து மீள மறு திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். மணப்பெண் நந்தினியும் இந்த திருமணத்தில் தனக்கு மகிழ்ச்சி எனவும், வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.