12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மத போதகர் - குழந்தைக்கு தயாராகி வந்த கொடூரம்!

Marriage Africa
By Sumathi Apr 04, 2024 05:48 AM GMT
Report

 63 வயது சாமியார் ஒருவர் 12 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு திருமணம் 

ஆப்பிரிக்கா, கானாவின் தலைநகரம் அக்ரா. இங்கு நுங்குவா பகுதியைச் சேர்ந்தவர் நூமோ பார்கடே லாவே சுரு (63). இவர் மத போதகராக இருந்து வருகிறார்.

நூமோ பார்கடே லாவே சுரு

இந்நிலையில், இவர் 12 வயது சிறுமியை திரளான விழா மற்றும் சடங்குகளின் மத்தியில் திருமணம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. உடனே, இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

7 அடி முள்படுக்கையில் படுத்துக்கொண்டு அருள்வாக்கு கூறிய பெண் சாமியார் - வைரலாகும் Video!

7 அடி முள்படுக்கையில் படுத்துக்கொண்டு அருள்வாக்கு கூறிய பெண் சாமியார் - வைரலாகும் Video!

கடும் எதிர்ப்பு

ஆனால், பாரம்பரிய முறைப்படி இத்திருமண நிகழ்வு நடந்திருப்பதால் அதில் தலையிட மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லை. சிறுமிக்கு 6 வயது ஆன போதே இத்திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை சிறுமிக்குக் கல்வி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மத போதகர் - குழந்தைக்கு தயாராகி வந்த கொடூரம்! | 63 Year Old Pastor Married A 12 Year Girl Africa

இதனால் இது சமய சடங்கு சார்ந்த திருமணமே அன்றி வேறில்லை என்று மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணையில் அச்சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் மீட்டு பாதுகாப்பில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே மணமுடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.