ஆப்பிளை கொடுத்து 15 சிறுமிகளை சீரழித்த சாமியார் : வெளியான கொடூர சம்பவம்

By Irumporai Nov 10, 2022 06:07 AM GMT
Report

கார்நாடகாவில் தன்னிடம் வரும் சிறுமிகளுக்கு ஆப்பிளை கொடுத்து சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக விளங்குபவர் 64 வயதான சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி. கடந்த சில செப்டம்பர் மாதத்தில் ஆசிரமத்தில் இருந்த இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில் சரணரு சுவாமி கைது செய்யப்பட்டார்.

ஆப்பிளை கொடுத்து 15 சிறுமிகளை சீரழித்த சாமியார் : வெளியான கொடூர சம்பவம் | Hindu Priest Rape Case

அவருடன் மடத்தின் வார்டன், 2 ஊழியர்கள், வழக்கறிஞர் ஒருவர் என 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சிக்கிய சாமியார்

இதுதொடர்பான குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். அதில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சிறுமிகளுக்கு ஆப்பிளில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சாமியாரின் ஆசைக்கு இணங்க மறுக்கும் சிறுமிகளை வார்டன் நைஸாக பேசி மயக்க மருந்து கலந்த ஆப்பிளை கொடுத்து மயக்கமுற செய்தபின் சாமியார் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது