6,000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் - தீயாய் பரவும் தகவல்!
மிகவும் பழமையான சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.
சிவலிங்கம்
6,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் பரவியது. அது தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள சுத்வாரா குகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கும்பகர்ணனின் வாள் கிடைத்தது என்று ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், இந்தத் தகவல் தவறானது என்றும், இவ்வாறான சிவலிங்கம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
FACT CHECK
இதன் உண்மை தன்மையை அறிய அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, சுத்வாரா (Sutwara) என்ற பெயரில் தென் ஆப்ரிக்காவில் குகையே இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் சுத்வாலா குகையில் கண்டெடுக்கப்பட்டதா என்று அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மின்னஞ்சலுக்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதற்கு, இந்தத் தகவல் தவறானது என்று விளக்களித்துள்ளனர்.