35 வருஷமா காத்திருந்த 60 வயது பெண்மணி - கரம்பிடிக்கும் 56 வயது காதலர்
60 வயது பெண்மணி தன்னுடைய காதலருடன் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
35 வருட காதல்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா(60). சமையல் கலை நிபுணராக பணிபுரிந்து ஓய்வில் உள்ளார். இவரது காதலர் கிரஹாம்(56). இவர் 28 வருடங்களுக்கு முன்பு இப்பெண்மணியிடம் காதலை தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றும்,
தங்களது நிச்சயதார்த்தத்திற்காக மட்டும் ஒரு மோதிரத்தை வாங்கி பரிசளித்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொண்டு தான் காதலை நிரூபிக்க வேண்டும் இல்லை என்றும் உறவில் நமது அர்ப்பணிப்பே போதுமானது என்றும் கூறியுள்ளார்.
60 வயதில் திருமணம்
பல வருடங்களாக காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது திடீரென மன மாற்றம் அடைந்து ஸ்காட்லாந்தின் லாசி மவுத் கடற்கரையில் தனது காதலியிடம் மண்டியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து ஆண்ட்ரியா, “இதை என்னால் சற்றும் நம்ப முடியவில்லை, என்னை நானே அவ்வபோது கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். நாங்கள் கேரவனை நோக்கி செல்கிறோம் என்று நினைத்துதான் அங்கு சென்றோம்.
ஆனால் திடீரென்று அவர் எனக்கு முன்பு மண்டியிட்டு திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். இது மிகவும் ஸ்பெஷலான அதே சமயத்தில் ரொமான்டிக்கான தருணம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவர்களின் திருமணமானது அவரின் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரின் முன்னிலையில் சிறப்பாக நடக்க உள்ளது. மேலும், ஆண்ட்ரியாவின் தந்தைக்கு 88 வயது பூர்த்தி அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.