கண் அரிப்பால் துடித்த பெண்; ஆடிப்போன டாக்டர்ஸ் - அப்படி என்ன சம்பவம்?

China
By Sumathi Dec 09, 2023 12:00 PM GMT
Report

பெண் ஒருவரின் கண்களில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண் அரிப்பு

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்களில் ஏற்பட்ட அரிப்பால் மருத்துவரை அணுகியுள்ளார். அங்கு அவரது கண்களை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது கண்ணில் உயிருடன் நெளியும் புழுக்கள் தென்பட்டன.

live-worms-in eyes

இதனைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின், அங்குள்ள சிறப்பு கண் மருத்துவரான டாக்டர் குவான் புழுக்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டார்.

கண்களில் இருந்து எறும்பு வெளியேறும் விநோத பாதிப்பால் அவதிப்படும் சிறுமி..மருத்துவ உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்

கண்களில் இருந்து எறும்பு வெளியேறும் விநோத பாதிப்பால் அவதிப்படும் சிறுமி..மருத்துவ உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்

நெளிந்த புழுக்கள்

முடிவில் 60 புழுக்கள் உயிரோடு நெளிவதைக் கண்டு அதிர்ந்துபோனார். நீண்ட மருத்துவ நடைமுறைக்கு பின் உருளைப் புழுக்கள் முழுவதுமாக அகற்றப்பட்டன. வளர்ப்பு பிராணி வைத்திருப்போரையே இது போன்று புழுக்கள் தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

china

ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்ட பூனைகள் அல்லது நாய்களின் லார்வாக்களில் இருந்து மனிதருக்கு அவை தொற்றுகின்றன. வளர்ப்பு பிராணிகளை தொற்றுக்கள் ஏற்படாது பாதுகாப்பதோடு, செல்லப் பிராணிகளிடம் இருந்து போதிய இடைவெளி பராமரிப்பதும் நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.