6 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - சிக்கிய அரசியல் பிரமுகர்

Chennai
By Karthikraja Aug 24, 2024 10:30 AM GMT
Report

6 வயது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 வயது சிறுமி

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் நேற்று முன் தினம் இரவு தலையில் அடிபட்டதாக கூறி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

child harrased by father

சிறுமியை முழு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் பாலின உறுப்பில் காயம் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

பள்ளியில் வைத்தே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விஷயம் தெரிந்து ஆசிரியர்கள் செய்த கொடூரம்

பள்ளியில் வைத்தே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விஷயம் தெரிந்து ஆசிரியர்கள் செய்த கொடூரம்

புரட்சி பாரதம்

தகவலின் அடிப்படையில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, சிறுமியின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. உடனடியாக அவருடைய தந்தையும் புரட்சி பாரத கட்சியின் புதுச்சேரி மாநில தலைவரான ரவியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். 

puratchi bharatham ravi

முதலில் இந்த குற்றச்சாட்டை மறுத்த ரவி, போலீசார் கஸ்டடியில் எடுத்து நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியின் தாய் அங்கன்வாடி பணியாளர் என்பதும், அவர் ரவியின் இரண்டாவது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.