பள்ளி ஆசிரியை மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 6வயது மாணவன் - அதிர்ச்சி சம்பவம்

United States of America Crime
By Sumathi Jan 07, 2023 11:54 AM GMT
Report

பள்ளி ஆசியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 வயது மாணவன்

அமெரிக்கா, விர்ஜீனியா மாகாணத்தில் ரிட்னெக் என்ற ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த 30 வயதுடைய ஆசிரியைக்கும் 6 வயது மாணவனுக்கும் வாக்குவாதம் எற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே, அந்தச் சிறுவன் தனது துப்பாக்கியால் அந்த ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளான்.

பள்ளி ஆசிரியை மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 6வயது மாணவன் - அதிர்ச்சி சம்பவம் | 6 Year Old Student Shot A School Teacher In The Us

இந்த தாக்குதலில் ஆசிரியைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்க்கர் கூறுகையில், ”இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதை நாம் தடுக்க வேண்டும்.

 துப்பாக்கிச்சூடு 

அதை அனைவருமே உறுதிப்படுத்த வேண்டும்” என்றார். இந்தச் சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஸ்டுவ் ட்ரூ கூறும்போது, ஆசிரியை பலத்த காயமடைந்து உள்ளார். காயம் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் உள்ளது. 6 வயது மாணவனை காவலில் எடுத்து உள்ளோம்.

இந்த சம்பவம் விபத்தாக நடந்து போல் தெரியவில்லை. வேறு மாணவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவும் இல்லை. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.