கழிவறையில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் யஸ்பால் (26) என்பவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விமான நிலையத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு கழிவறைக்கு ஓடி வந்தனர். அங்கு யஸ்பால் ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ராஜஸ்தானை சேர்ந்த யஸ்பால் என்பது தெரியவந்தது. இவர் 2017ம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்துள்ளார். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.