6 வயது சிறுமிக்கு 45 வயது நபருடன் திருமணம் - சர்ச்சை தீர்ப்பு
45 வயது நபர், 6 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளார்.
கட்டாய திருமணம்
ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு அதிகாரப்பூர்வ திருமண வயது இல்லை.
இந்நிலையில், தெற்கு ஆப்கனின் மர்ஜா மாவட்டத்தில், 45 வயது நபர் ஒருவருக்கும், 6 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்த வீடியோ வெளியானது.
அரசு கொடுமை
அது வைரலானதை தொடர்ந்து வறுமை காரணமாக சிறுமியை அந்த நபருக்கு தந்தையே விற்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் உலகளவில் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனையடுத்து சிறுமியின் தந்தை மற்றும் மணமகனை தலிபான் அரசு கைது செய்தது. தொடர்ந்து முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், சிறுமி தாய் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
மேலும், 9 வயதான பின், சிறுமியை மணமகன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.