6 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கடித்து கொடூர கொலை - சிக்கிய தாயின் ஆண் நன்பர்!

Attempted Murder Chennai Crime
By Sumathi Apr 24, 2024 04:23 AM GMT
Report

6 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கொலை

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா(31). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரிந்து வசித்து வருகிறார்.

தேஜஸ்வினி

இவருக்கு ஒரு மகனும், 6 வயது தேஜஸ்வினி என்ற மகளும் உள்ளனர். திவ்யா ராயப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் துப்புரவு பணி செய்து வருகிறார். இந்நிலையில், தன்னுடன் வேலை செய்து வந்த சீனிவாசன் என்பவருடன் குடும்பம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, திவ்யா வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில், சீனிவாசன், 2 பிள்ளைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். இதில் திடீரென சிறுமி தேஜஸ்வினியை மயங்கியநிலையில் சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் - தண்ணீரில் மூழ்கடித்து இளைஞர் கொடூரச்செயல்!

ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் - தண்ணீரில் மூழ்கடித்து இளைஞர் கொடூரச்செயல்!

 தீவிர விசாரணை

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடனே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் திவ்யாவின் மகன் போலீஸாரிடம் கூறுகையில், திவ்யா வேலைக்கு சென்ற பிறகு சீனிவாசன், சிறுமியை அடித்துள்ளார்.

6 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கடித்து கொடூர கொலை - சிக்கிய தாயின் ஆண் நன்பர்! | 6 Year Girl Killed By Mothers Boyfriend Chennai

பின், சிறுமியை குளியலறைக்கு அழைத்துச் சென்று கதவை அடைத்து கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் சிறுமி அழும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து குளியலறையிலிருந்து சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் எனத் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.