மூதாட்டியுடன் வாலிபருக்கு கள்ளக்காதல் - இடையூறாக இருந்த குழந்தை கொடூரக் கொலை - கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் சஜிஷ். இவர் மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சஜிஷின் தாயார் தீப்தி. இவர் தான் 1½ வயது பெண் குழந்தையை பராமரித்து வந்தார்.
இந்நிலையில், வயதான தீப்திக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜான் பினோய் என்ற வாலிபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்து வந்துள்ளனர். அடிக்கடி மகன் வீட்டிற்கு வருவதால், இவர்கள் அடிக்கடி லாட்ஜிக்கும் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீப்தியும், ஜான் பினோயும் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, குழந்தையை தீப்தி லாட்ஜிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
திடீரென்று அதிகாலை 2 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி தீப்தியும், ஜான் பினோவும் லாட்ஜை விட்டு வெளியேறியுள்ளனர். குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதனையடுத்து, மருத்துவர்களுக்கு இவர்கள் மேல் சந்தேகம் வரவே, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த பிரேத பரிசோதனையில், குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. லாட்ஜில் தங்கியிருந்தபோது தீப்தியும், ஜான் பினோயும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். அப்போது, அந்தக் குழந்தை இவர்கள் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த ஜான் பினோய், குழந்தையை குளியலறையில் இருந்த வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, ஜான் பினோயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தி வருகிறார்கள்.