ஓட..ஓட..விரட்டி கொலை; மாணவர் செய்த கோர சம்பவம் - 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!

Sri Lanka Canada Death
By Swetha Mar 08, 2024 11:36 AM GMT
Report

இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் குத்திக்கொலை செய்யப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரட்டி கொலை

கனடா தலைநகர் ஒட்டாவாவில், இலங்கையைச் சேர்ந்த தர்ஷினி ஏகன்யாகே(35) என்பவர்  பர்ஹெவன் பகுதியில் தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ஓட..ஓட..விரட்டி கொலை; மாணவர் செய்த கோர சம்பவம் - 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி! | 6 Sri Lankans From The Same Family Were Killed

 இச்சம்பத்தன்று தர்ஷினி, அவரது நண்பர்களுடன் வீட்டில் பேசிக்கொண்டி இருந்துள்ளார். அப்போது திடீரென வீடு புகுந்த இளைஞர், அங்கிருந்த தர்ஷினி, அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். தப்பியோட நினைத்தவர்களையும் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார்.

இதில், தர்ஷினி, அவரது மகன் இனுகா விக்ரமசிங்கே(7), மகள்கள் அஸ்வினி(4), ரினியானா(2), இரண்டரை மாதங்களான கெல்லி மற்றும் நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுக்க முயன்ற இளைஞர் - போராடி மீட்ட பெற்றோர்

காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுக்க முயன்ற இளைஞர் - போராடி மீட்ட பெற்றோர்

கோர சம்பவம்

இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தர்ஷினியின் கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட..ஓட..விரட்டி கொலை; மாணவர் செய்த கோர சம்பவம் - 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி! | 6 Sri Lankans From The Same Family Were Killed

இதையடுத்தது, உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இலங்கையைச் சேர்ந்த ஃபைப்ரியோ டி சொய்சா(19) என்ற மாணவனை கைது செய்துள்ளனர்.

ஓட..ஓட..விரட்டி கொலை; மாணவர் செய்த கோர சம்பவம் - 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி! | 6 Sri Lankans From The Same Family Were Killed

மேலும், அந்த இளைஞன் தர்ஷினியின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் எதற்காக இத்தனை கொலைகளை செய்தார் என்பதற்கான காரணம் அறியப்படாத நிலையில், போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.