6 பந்துகளில் 6 சிக்ஸர்; அதிரடி சாதனை படைத்த ஆந்திர வீரர் - வைரலாகும் Video!
6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி ஆந்திர வீரர் வம்சி கிருஷ்ணா சாதனை படைத்துள்ளார்.
ஆந்திர வீரர் சாதனை
பிசிசிஐ நடத்தும் உள்ளூர் அளவிலான நடப்பு சிகே நாயுடு கோப்பை தொடர் (23 வயதுக்குட்பட்டோர்) தற்போது இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரயில்வே அணி - ஆந்திர அணி மோதியது. இதில் ஆந்திராவுக்காக விளையாடிய வீரர் வம்சி கிருஷ்ணா 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
இதன் மூலம் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக இந்திய வீரர்கள் ரவி சாஸ்திரி (1985), யுவராஜ் சிங் (2007) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (2022) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த வம்சி கிருஷ்ணா இணைந்துள்ளார். பிசிசிஐ வெளியிட்டுள்ளது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
? ????? ?? ?? ???? ?????! ?
— BCCI Domestic (@BCCIdomestic) February 21, 2024
Vamshhi Krrishna of Andhra hit 6 sixes in an over off Railways spinner Damandeep Singh on his way to a blistering 64-ball 110 in the Col C K Nayudu Trophy in Kadapa.
Relive ?️ those monstrous hits ?@IDFCFIRSTBank | #CKNayudu pic.twitter.com/MTlQWqUuKP