தேசிய விலங்கு, பறவை, பூ தெரியும் - இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா..?
இந்திய நாட்டின் தேசிய காய்கறி குறித்த தகவல்.
தேசிய காய்கறி
இந்தியாவின் தேசிய கீதம், தேசிய விலங்கு, பறவை மற்றும் பூ குறித்து அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியாவுக்கென்று ஒரு தேசிய காய்கறி உள்ளது என்பது நாட்டில் பலருக்கு தெரியாது.
அந்த காய்கறி எல்லோருக்கும் பிடித்தது என்று சொல்ல முடியாது. இது இனிப்பு சுவை கொண்டது மற்றும் இதனுடன் பல்வேறு உணவுகள் சமைக்கப்படுகின்றன.
பூசணிக்காய்
ஆமாம் பூசணி தான் இந்தியாவின் தேசிய காய்கறி. இந்தியா முழுவதும் பயிரிடப்படும், வைட்டமின் ஏ நிறைந்த பூசணி உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
விலை அதிகம் இல்லாவிட்டாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், பூசணிக்காய்கள் வடக்கிலிருந்து தெற்கே, கிழக்கிலிருந்து மேற்காக எல்லா இடங்களிலும் நடைமுறையில் உள்ளன.