ஒரே நேரத்தில் 6 கோள்கள் தெரியும் அதிசய நிகழ்வு - எப்போது, எப்படி பார்ப்பது?

Chennai
By Sumathi Jan 22, 2025 07:29 AM GMT
Report

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசய நிகழ்வை காணலாம்.

 6 கோள்கள்

சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றும் கோள்கள் ஒரே பார்வையில் சந்திக்கும் நிகழ்வு அவ்வப்போது ஏற்படும்.

solar system

அதன்படி, செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி, சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை இதனை காணும் வகையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பூமியில் விழுந்த விண்கல்; முதல்முறையாக அந்த சத்தம் பதிவு - 4.5 பில்லியன் ஆண்டுகள் பழசாம்..

பூமியில் விழுந்த விண்கல்; முதல்முறையாக அந்த சத்தம் பதிவு - 4.5 பில்லியன் ஆண்டுகள் பழசாம்..

அதிசய நிகழ்வு

வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை வெறும் கண்களாலும், யுரேனஸ், நெப்டியூனை தொலைநோக்கி மூலம் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 6 கோள்கள் தெரியும் அதிசய நிகழ்வு - எப்போது, எப்படி பார்ப்பது? | 6 Planets Align At The Same Solar System

மேலும், கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் கோள்கள் இருந்தாலும், நம்முடைய கண்களுக்கு அருகில் இருப்பது போல் தோன்றும் என்று இயக்குநர் லெனின் தமிழ் கோவன் தெரிவித்துள்ளார்.

இதே போன்ற ஆறு கோள்களின் அணிவகுப்பு மீண்டும் பிப்ரவரி 28 மற்றும் ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.