பிரபல கடையில் பசு,எருமை இறைச்சி கலந்து செய்யப்பட்ட சமோசா விற்பனை - 6 பேர் கைது!
வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் எருமை மற்றும் மாட்டிறைச்சி கலந்து சமோசா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசு, எருமை இறைச்சி சமோசா
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா பகுதியில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் தொடர்ந்து மாட்டிறைச்சி கலந்து சமோசாவை விற்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. அதன்பேரில் சிப்வாட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஹுசைனி சமோசா கடையில் தீவிர சோதனை நடக்கப்பட்டது.
அப்போது பல நூறு கிலோ மாட்டிறைச்சியில் செய்யப்பட்ட சமோசாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கடையின் உரிமையாளர்களான யூசுப் ஷேக், நயீம் ஷேக், மற்றும் தொழிலாளர்களான ஹனிப் பதியாரா, தில்வார் பதான், மொயின் ஹப்தால் மற்றும் மொபின் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இங்கு தயாரிக்கப்பட்டும் மாட்டிறைச்சி நிரபப்பட்ட சமோசாகளை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி இது பீப் சமோசா என்று கூட அறியாமல் நகர் முழுவதும் பலர் சாப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 பேர் கைது
குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் ஐந்து மாடிக் கட்டிடத்தில் சமோசா தயாரித்து வந்ததாகவும், இங்கு மாட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கைதான யூசுப் ஷேக் விசாரணையில், தனது தந்தை சமோசா விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது அவரும் அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் இன்னும் சமோசா தயாரிக்க அனுமதி பெறவில்லை என்று தெறியவந்துள்ளது.
மேலும், தினமும் அதிக அளவு சமோசாக்களை தயாரித்து நகரம் முழுவதும் உள்ள கடைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று டிசிபி பன்னா மோமயா கூறினார். இது குறித்து அவர் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு காலம் மாட்டிறைச்சி சமோசாக்களை விற்றார்கள் என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்றார்.
பொதுவாக சமோசா செய்ய ஆட்டிறைச்சியை பயன்படுத்துவதுண்டு. ஆனால், ஆட்டிறைச்சி விலை உயர்ந்துள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பசு மற்றும் எருமை இறைச்சியை கலந்து சமோசா தயாரித்ததாக தெரிகிறது.