நிலைகுலைய வைத்த கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி!

Accident Death Salem
By Sumathi Sep 06, 2023 03:15 AM GMT
Report

 லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோர விபத்து

சேலம், சங்ககிரி அருகே சின்ன கவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது கொண்டலாம்பட்டியிலிருந்து பெருந்துறைக்குச் சென்ற ஆம்னி வேன், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

நிலைகுலைய வைத்த கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி! | 6 People Died By Accident Near Sangagiri Salem

இந்த கொடூர விபத்தில் வேனில் பயணித்த ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 6 பேர் பலி

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி அருண் கபிலன் மற்றும் போலீசார் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

நிலைகுலைய வைத்த கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி! | 6 People Died By Accident Near Sangagiri Salem

இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.