கோர விபத்து..! திருச்சி அருகே லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

Tamil nadu Tiruchirappalli
By Thahir 3 நாட்கள் முன்

திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

6 பேர் விபத்து 

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது.

அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் காரில் இருந்து சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

6 killed in a car collision with a lorry near Trichy

மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 6 பேரும் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.