6 மாத காத்திருப்பு தேவையில்லை - சம்மதித்தால் உடனே விவாகரத்து தான்!
பரஸ்பர சம்மதத்துடன் உடனே விவாகரத்து பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து
தம்பதியில் ஒருவர் சம்மதம் தெரிவிக்காவிட்டால், விவாகரத்து கிடைப்பதில் சிக்கலும் தாமதமும் உண்டாகிறது. மேலும், விவாகரத்து பெற 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது சட்டம். இந்நிலையில், பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து கோரும் தம்பதிக்கு,

ஆறு மாத காத்திருப்புக் காலத்தில் விலக்கு அளிக்கக்கோரும் வழக்கு, பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில், `` உச்ச நீதிமன்றத்துக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி, பரஸ்பர சம்மதத்தின் மூலம் கோரப்படும் விவாகரத்து வழக்குகளில் மண முறிவை நீதிமன்றம் அறிவிக்கலாம்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மேலும், நீதிமன்றங்கள் தங்கள் முன்னுள்ள வழக்குகளின் தன்மைகளைப் பொறுத்து, கட்டாய ஆறு மாத கால நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கலாம். திருமண முறிவு எப்போது ஏற்படும் என்பதை தீர்மானிக்கக்கூடிய காரணிகளை, குறிப்பாக பராமரிப்பு, ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள்

தொடர்பாக பங்குகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதையும் அமர்வு வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏ.எஸ். ஓகா, விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.