சைக்கிள் ஓட்டும் போது போன் பேசினால் சிறை - போக்குவரத்து விதிகளில் புதிய மாற்றம்
சைக்கிளில் செல்வோர் செல்போன் பயன்படுத்தினாலோ, மது போதையில் இருந்தாலோ அபத்தம் விதிக்கும் வகையில் சட்டதிருத்தும் செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்து
வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்தும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கவன சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஏற்கனவே வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளது.
சைக்கிள் விபத்துகள்
ஜப்பானில் சைக்கிளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். கடந்த சில நாள்களாக சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிகமாக சாலை விபத்துகளில் சிக்கி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டில் 70,000 சைக்கிள் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது செல்போன் பேசினால் அல்லது இணையத்தை பயன்படுத்தினால் 6 மாதம் சிறை அல்லது 50,000 அபராதம் என போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மதுபோதையில் சைக்கிள் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2.75 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.