வேன் லாரி மீது மோதி பயங்கர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!
வேன் லாரி மீது மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோர விபத்து
குஜராத், ஜம்புசார்-அமோத் சாலையில் வேதாச் கிராமத்தை சேர்ந்த 10 பேர், வேனில் சுக்லதீர்த் நோக்கி சென்றுள்ளனர். அப்போது மக்னாட் கிராமத்திற்கு அருகே சாலையின் இடது புறத்தில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது.

இதன் மீது எதிர்பாராத விதமாக பயணிகளை ஏற்றி சென்ற தனியார் வேன் மோதியது. இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
6 பேர் பலி
மேலும், 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் ஜம்புசாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனே இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில் உயிரிழந்தவர்கள் ஜெய்தேவ் கோஹில் (23), சரஸ்வதி கோஹில் (21), ஹன்சா ஜாதவ் (35), சந்தியா ஜாதவ் (11), விவேக் கோஹில் (16), கீர்த்தி கோஹில் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழில் காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் இலட்ச ரூபாய் மீட்பு - சிக்கிய நபர்கள்: பறந்த உத்தரவு IBC Tamil