இந்த 6 மாவட்டங்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்..தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில்வேகமாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில்ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
29-ம் தேதி ஓரிரு இடங்களிலும், ஜூலை இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.